வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் தவிர, பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளமாட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால், கடந்த 7-ஆம் தேதி தனது அப்பா கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடி அருகே இருக்கும் தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில், தனது தாத்தா சீனிவாசனின் சிலைத் திறப்பு விழாவில் தங்கை அக்ஷராவுடன் உற்சாகமாகக் கலந்துகொண்டார். மறுநாள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "மக்கள் நீதி மய்யம்' அலுவலகத்தில் நடந்த கே. பாலசந்தரின் சிலைத் திறப்பு விழாவிலும் ஸ்ருதியும் அக்ஷராவும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

Advertisment

ss

இப்போது தமிழில் விஜய்சேதுபதியுடன் "லாபம்' படத்தில் நடித்துவரும் ஸ்ருதி, நீண்ட இடைவெளிக்குப்பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க கதை கேட்டு ஓ.கே. பண்ணியுள்ளாராம். ரவிதேஜா ஜோடியாக, கோபிசந்த் மலிநேனி டைரக்ஷனில் நடிக்கும் தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.